மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு தி.மு.க. நிதியுதவி


மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு தி.மு.க. நிதியுதவி
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி அருகே மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் பச்சிராஜன் (வயது 54). இவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று, இறந்தவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் அரசின் சார்பில் நிவாரண உதவித்தொகை பெற்றுத்தர கட்சியின் மாவட்ட கிளை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.


Next Story