தி.மு.க. கொடியேற்று விழா
கடையநல்லூர் பகுதியில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு மெகராஜ் நகர், மேலக்கடையநல்லூர் பூங்கா, ரஹ்மானியாபுரம் 4-வது தெரு, கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் முருகையா, கவுன்சிலர்கள் முகையதீன்கனி, முருகன், கலைஞர் மன்ற தலைவர் தம்பி ராஜ், ராமர் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், சாமித்துரை, தமிழ்செல்வி, மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி, மாநில விவசாய அணி இணை செயலாளர் அப்துல்காதர், செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன், கடையநல்லூர் யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.