தி.மு.க. கொடியேற்று விழா
நெல்லையில் தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வார்டு வாரியாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் 29-வது வார்டில் நடந்த கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு கவுன்சிலரும், வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவருமான சுதா மூர்த்தி தலைமை தாங்கினார். வேல்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கவுன்சிலர் கோகிலவாணி, சிவசுப்பு, சி.பா.முருகன், நெல்லை முத்தையா, வர்த்தக அணி செயலாளர் எல்.ஐ.சி.பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து 30-வது வார்டு நெல்லை சந்திப்பு துவரை ஆபிஸ் பகுதியில் நடந்த கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கொடியேற்றும் போது அங்கு நின்ற சிறுவன் முத்துராஜை அழைத்து அப்துல் வகாப் கொடியேற்ற சொன்னார். இதைத்தொடர்ந்து அந்த சிறுவன் கொடியேற்றினார்.