தி.மு.க. பொதுக்கூட்டம்
சிவந்திபுரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அம்பை ஒன்றியம் சிவந்திபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மதுரை சேவியர் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், மாவட்ட துணைச்செயலாளர் மாஞ்சோலை மைக்கேல், மாவட்ட கவுன்சிலர் தவசு பாண்டியன், யூனியன் துணைத்தலைவர் ஞானக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணியைச் சேர்ந்த குட்டி தங்கராஜா நன்றி கூறினார். ஏற்பாடுகளை அம்பை ஒன்றிய தி.மு.க. செய்திருந்தது.
Related Tags :
Next Story