தி.மு.க. பொதுக்கூட்டம்
புளியங்குடியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
புளியங்குடி:
புளியங்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் தி.மு.க. ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், நகர அவைதலைவர் வேல்சாமி பாண்டியன், கவுன்சிலர் பொன்னுதுரைச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் பேசினார்கள்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி.சீனிவாசன், ஒன்றிய செயலாளர் பெரிய துரை, மாவட்ட பொருளாளர் சரவணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கட்ராமன், முஸ்லிம் லீக் நகர செயலாளர் சேக் காதர் மைதீன், கவுன்சிலர்கள் பிவி, பாலசுப்பிரமணியன், உமா மகேஷ்வரி, ரெஜிகலா, பீர்பாத், நகர துணை செயலாளர்கள் கருப்பசாமி. காந்திமதியம்மாள், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், பெருமாள் மாரிசெல்வம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பிச்சையா, கழக பேச்சாளர்கள் மீனாட்சி சுந்தரம், சுப்பு அப்துல் ஜப்பார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.