தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்


தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
x

தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை நகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் அவை தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா, தொகுதி பார்வையாளர் சுபசரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம், தலைமை கழக பேச்சாளர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர்களாக 2 ஆயிரம் பேர் இணைந்த படிவங்களை அண்ணாதுரை எம்.எல்.ஏ.விடம் நகர செயலாளர் செந்தில்குமார் வழங்கினார். முன்னதாக மாவட்ட பிரதிநிதி அழகேசன் வரவேற்றார். முடிவில் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story