தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டம்
தலைஞாயிறில் தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டம் நடந்தது.
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம், பேரூர் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் தலைஞாயிறில் நடந்தது. கூட்டத்திற்கு தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைஞாயிறில் தாசில்தார் அலுவலகம், துறை சார்ந்த அலுவலகங்கள் அமைக்க வேண்டும். தலைஞாயிறை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 90 சதவீத மக்கள் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர். எனவே நகரப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்தை நடப்பாண்டிலேயே விரிவுப்படுத்த அரசை வலியுறுத்துவது, தலைஞாயிறு பேரூராட்சி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சி பகுதிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கற்பகம் நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.வேதரத்தினம், ஒன்றிய குழுத்தலைவர் தமிழரசி, வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, செயற்குழு உறுப்பினர் மறைமலை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி வீரக்குமார், வக்கீல்கள் அன்பரசு, ஜெய்சங்கர் உள்பட மாவட்ட, ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.