தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி, பெண்களுக்கு தையல் எந்திரங்கள் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்குகிறார்
அணைக்கட்டு தொகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி, ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் எம்.எல்.ஏ. இன்று வழங்குகிறார்.
அணைக்கட்டு தொகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி, ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் எம்.எல்.ஏ. இன்று வழங்குகிறார்.
நலத்திட்ட உதவிகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க. சார்பில் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, ஏழைப் பெண்களுக்கு 150 தையல் எந்திரங்கள், மாற்று திறனாளிகள் 22 பேருக்கு மூன்றுசக்கர சைக்கிள், சலவைத் தொழிலாளிகள் 100 பேருக்கு சலவை பெட்டிகள், நாவிதர்கள்100 பேருக்கு சலூன்கிட், ஆட்டோ டிரைவர்கள் 22 பேருக்கு ஆட்டோ, 150 இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், அணைக்கட்டு தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு மூலைகேட் பகுதியில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
விழாவிற்கு வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். வேலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பாபு வரவேற்கிறார். வேலூர் ஒன்றிய செயலாளர் சி.எல்.ஞானசேகரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. குமாரபாண்டியன், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சி.எம்.தங்கதுரை, ஆர்.கே.அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.
விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரை ஆற்றுகிறார். கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் வேலூர் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி, டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி., வேலூர் மாநகர செயலாளர் ப. கார்த்திகேயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் வி.அமுலு விஜயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் ஏ.சுஜாதா உள்பட மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் என்.பிரகாஷ் நன்றி கூறுகிறார்.
நலத்திட்ட உதவிகள் வழங்க வருகைதரும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை வரவேற்க மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு வேலூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டுள்ளார்.