தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
சாத்தான்குளம் அருகே தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் முதலூர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அன்னகணேசன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலரும், முதலூர் ஊராட்சி தலைவருமான பொன்முருகேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் சபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதனை தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி நயினார், ஒன்றிய பொருளாளர் மதுரம்செல்வராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காலேப் ஆபிரகாம் நன்றி கூறினார்.