திமுக பல அடக்குமுறைகளை சந்தித்துள்ளது, இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல - அமைச்சர் பொன்முடி


திமுக பல அடக்குமுறைகளை சந்தித்துள்ளது,  இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல - அமைச்சர் பொன்முடி
x
தினத்தந்தி 14 Jun 2023 8:57 AM IST (Updated: 14 Jun 2023 9:00 AM IST)
t-max-icont-min-icon

திமுக கடந்த காலங்களில் பல அடக்குமுறைகளை சந்தித்துள்ளது, அனைத்திலிருந்தும் மீண்டு வருவோம் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை,

ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்த பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டெல்லி, கர்நாடகத்தை தொடர்ந்து தமிழகத்திலும் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.திமுக கடந்த காலங்களில் பல அடக்குமுறைகளை சந்தித்துள்ளது, அனைத்திலிருந்தும் மீண்டு வருவோம். இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல என்றார்.


Next Story