மொழிப்போரில் திமுக என்றும் தோற்றதில்லை... சி.ஏ.பி.எப். தேர்வு குறித்து உதயநிதி ஸ்டாலின் டுவீட்
சிஏபிஎப் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்ற அறிவிப்பு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF) தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்ததாக நாடு முழுவதும் வரும் 2024 ஜனவரி 1-ந்தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய டுவீட்டரில் கூறும்போது; மொழிப்போரில் கழகம் என்றும் தோற்றதில்லை, மற்றுமொரு வரலாற்று வெற்றியாக சிஆர்பிஎப் தேர்வு 13 மாநில மொழியில் நடத்தப்படுமென அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம்.
குரல் கொடுத்து உரிமை காத்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கழக இளைஞர்-மாணவர் அணி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.