தி.மு.க. பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில்நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்;புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி


தி.மு.க. பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில்நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்;புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி
x

தி.மு.க. பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

ஈரோடு

தி.மு.க. பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு புதிய நீதிக்கட்சி ஆதரவு அளித்து உள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கம் வகித்து வரும் புதிய நீதிக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் ஈரோடு வில்லரசம்பட்டியில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், பி.தங்கமணி, கே.வி.ராமலிங்கம், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மீண்டும் பிரதமராக மோடி

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியதாவது:-

மாநிலத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளில் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மின்கட்டண உயர்வு, கட்டிட வரி உயர்வு, பால் விலை உயர்வு என்று அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து உள்ளன. அனைத்து பொருட்களும் 2 மடங்கு 3 மடங்கு விலை உயர்ந்து விட்டது.

எனவே நடைபெற இருக்கிற தேர்தல், ஆளும் கட்சிக்கு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டவும், அவர்களுக்கு புரிய வைக்கவும் நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றியின் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பாரத பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக ஆவார். இந்த தேர்தல் அதற்கான வாய்ப்பாக அமையும். மாநிலத்திலும் மாற்றங்கள் ஏற்பட இந்த தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகள் தீர்ப்பாக இருக்கும்.

இவ்வாறு புதிய நீதி கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.


Related Tags :
Next Story