தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு விழா


தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு விழா
x

நாங்குநேரியில் தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நாங்குநேரி கோர்ட்டு முன்பு நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, அரசு வழக்கறிஞர் பாலசுந்தர், நகர செயலாளர் வானுமாமலை, பஞ்சாயத்து தலைவர்கள் சாந்தகுமாரி (மறுகால்குறிச்சி), எஸ்.கே.சீனிதாஸ் (ஆழ்வாநேரி), சகுந்தலா (தெற்கு நாங்குநேரி), பஞ்சாயத்து துணைத்தலைவர் புஷ்ப பாண்டி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story