விருதுநகரில் வியாழக்கிழமைநடைபெறும்முப்பெரும் விழாவில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்


விருதுநகரில் வியாழக்கிழமைநடைபெறும்முப்பெரும் விழாவில் தி.மு.க.வினர்  திரளாக கலந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
x

விருதுநகரில் வியாழக்கிழமைநடைபெறும்முப்பெரும் விழாவில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

உடன்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தி.மு.க. உருவாக்கப்பட்ட நாள், தந்தை பெரியார் பிறந்த நாளும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி தி.மு.க., முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி, எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை அடைவதற்கு அயராது உழைத்து வரும் தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கியும், தி.மு.க. முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவாகவும், திராவிட மாடல் புத்தக வெளியிட்டு விழாவாகவும் முதல்-அமைச்சர் பேருரை ஆற்றும் விழாவாகவும் நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழா நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு விருதுநகர் பட்டம்புதூரில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் தி.மு.க. நிர்வாகிகளும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும், சார்பு அணிகளின் நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும், கட்சி முன்னணியினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story