தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
x

பகண்டை கூட்டு ரோட்டில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

பகண்டை கூட்டு ரோட்டில் ரிஷிவந்தியம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ரியாஅன்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் பாரதிதாசன், ஆடிட்டர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தீபா அய்யனார் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் அட்மா தலைவர் பத்மநாபன், இளைஞர் அணி ராஜாராமன் உள்பட ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story