தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
x

வேதாரண்யம் அருகே தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே மருதூர் வடக்கில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் தொடங்கி வைத்து, அதிக உறுப்பினர்களை சேர்க்கும் கிளைக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். மாவட்ட செயலாளர் கவுதமன், தொகுதி மேர்பார்வையாளர் ஜெகவீரபாண்டியன் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story