தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் விஜயாபதி, சிதம்பராபுரம், சவுந்திரபாண்டியபுரம், பரமேஸ்வரபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் புதிய உறுப்பினர் முகாம் நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் மி.ஜோசப் பெல்சி புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். ராதாபுரம், உதயத்தூர் ஊராட்சி பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்த்து பூர்த்தி செய்த படிவங்களையும் பெற்றுக்கொண்டார். ராதாபுரம் மேற்கு ஒன்றித்தில் 10 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணியில் கழக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், உதயத்தூர் ஒன்றியக்குழு உறுப்பினர் படையப்பா முருகன், ராதாபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் பலவேசம் சபாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story