தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா
செங்கோட்டையில் தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை காந்தி ரோட்டில் நகர தி.மு.க. அலுவலக திறப்பு விழா நடந்தது. நகர செயலாளர் வழக்கறிஞர் ஆ. வெங்கடேசன் வரவேற்று பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமை தாங்கி, நகர தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலா் தூவி மரியாதை செய்யப்பட்டது.
முன்னதாக போலீஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் முழுஉருவ சிலைக்கு சிவபத்மநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சேக்தாவூது, ஆறுமுகச்சாமி, மாநில விவசாய அணி இணை செயலாளர் அப்துல்காதர், மாவட்ட பொருளாளர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான்ஒலி, தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், இலஞ்சி சேர்மன் சின்னத்தாய் சண்முகசுந்தரம், தென்காசி ஒன்றிய தலைவர் ஷேக் அப்துல்லா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துவேல், கலைஞர் தமிழ் சங்க செயலாளர் ஆபத்துகாத்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் சண்முகராஜா நன்றி கூறினார்.