தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்


தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 9 April 2023 12:30 AM IST (Updated: 9 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நீர்மோர் பந்தல்

தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு கோடைகால நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதை தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி போன்றவை வழங்கினார்.

நிகழ்ச்சியில், முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரி சங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட தி.மு.க. அவை தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், வக்கீல் பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஜெபராஜ், நகர தி.மு.க. செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி

உடன்குடி மெயின் பஜாரில் நடந்த விழாவுக்கு உடன்குடி பேரூர் தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ் தலைமை தாங்கினார். நீர் மோர் பந்தலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இதில் உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாநில மகளிர் பிரசார குழு செயலாளர் ஜெஸி பொன் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்

ஆத்தூரில் மெயின் பஜாரில் நகர பஞ்சாயத்து சார்பில் நீர்மோர் பந்தலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் நகர பஞ்சாயத்துக்கு அரசால் வழங்கப்பட்ட நான்கு பேட்டரி ஆட்டோக்களை நகர பஞ்சாயத்து தூய்மை பணிக்காக கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.பி.சதீஷ்குமார், முன்னாள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி டைரக்டர் ராஜ்குமார், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியம், நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முருகன், நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு ஆத்தூர்

மேலும் தெற்கு ஆத்தூர் பஜாரில் அழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சார்பில் அமைக்கப்பட்ட நீர்-மோர் பந்தலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் பக்கீர் முகைதீன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

இதேபோல் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ஆறுமுகநேரி நகர தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதையும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் நகர தி.மு.க. துணை செயலாளர்கள் அகஸ்டின், முத்தீஸ்வரி, மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், நகர தி.மு.க. இளைஞரணி செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மெஞ்ஞானபுரம்-குரும்பூர்

உடன்குடி மேற்கு ஒன்றியம் மெஞ்ஞானபுரம் பஜாரில் நீர்மோர் பந்ததை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குரும்பூர் பஜாரில் தி.மு.க. தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஏ.பி.ஆர். ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாசரேத் காமராஜர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. நகர செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நகர அவை தலைவர் கருத்தையா, முன்னாள் அவை தலைவர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நாசரேத் நகர பஞ்சாயத்து துணை தலைவர் அருண் சாமுவேல், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் ரவி செல்வகுமார், காமராஜர் ஆதித்தனார் கழக மாவட்ட செயலாளர் ஐஜினஸ்குமார், காங்கிரஸ் நகர தலைவர் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story