தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம்


தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம்
x

நெல்லையில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் ஈசான விநாயகர் கோவில் முன்பு தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு தி.மு.க. அரசின் சாதனைகள் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், மானூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஈசான விநாயகர் கோவிலில் தரிசனம் செய்தார். அவருக்கு அங்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.


Related Tags :
Next Story