தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
சீர்காழியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சீர்காழி மேற்கு ஒன்றியம், நகரம், வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் கழகம் ஆகியவை சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள்,உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கழக செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கழக செயலாளர் சுப்பராயன் வரவேற்றார் கூட்டத்தில் மாநில மாணவரணி துணை செயலாளரும் மண்ணை நகர மன்ற தலைவருமான சோழராஜன் வாழ்த்தினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினராக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க. நிர்வாகிகள் அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், பேரூர் கழக செயலாளர் அன்புச்செழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், முத்து மகேந்திரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.