தி.மு.க. மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


தி.மு.க. மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

மணிப்பூர் மாநில பா.ஜ.க.அரசை கண்டித்து திருப்பத்தூர் ஸ்டேட் பாங்க் எதிரில் மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் எஸ். சாந்தி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் வி சங்கீதா வெங்கடேஷ் வரவேற்றார். முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி, ஒன்றிய செயலாளர்கள் உமா கவிதா, திருமதி, விஜயா, சத்தியா, சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளரும் க. தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துப் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மணிப்பூர் பா.ஜ.க. அரசை கண்டித்தும் தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர் அரசை கண்டித்தும் கொடூரத்தை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசு கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பிரியதர்ஷினி ஞானவேலன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாவட்ட கவுன்சிலர்கள் நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story