தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சிவகிரி அருகே ராயகிரியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அருகே ராயகிரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராயகிரி பேரூர் செயலாளர் கே.டி.சி. குருசாமி வரவேற்றார். அரசின் சாதனை குறித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜா, தலைமை கழக பேச்சாளர்கள் முரசொலி மூர்த்தி, ரவி, முத்தையா ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சங்கை சரவணன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு கிப்சன், வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் விஜய குமார், அவைத் தலைவர் நவமணி, முன்னாள் செயலாளர் சரவணன், இளைஞரணி முனீஸ்வரன், முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர்கள் செல்வராஜ், கட்டபொம்மன், மாவட்ட பிரதிநிதிகள் அய்யா மாரியப்பன், தங்கவேல், ஒன்றிய பிரதிநிதிகள் குமார், மலைக்கனி, சண்முக ராஜ், பாண்டியன், காளிமுத்து, கிளைச் செயலாளர்கள் விஜயகுமார், குருநாதன், மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.