தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
வல்லம், விக்கிரவாண்டி, மரக்காணம் பகுதியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
செஞ்சி:
வல்லம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தொண்டூர் ஊராட்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னையா, ஒன்றிய கவுன்சிலர்கள் கோமதி பிரபாகரன், இந்துமதி வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் அமிர்தம் அரிகிருஷ்ணன் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர்அமுதா ரவிக்குமார் தொடக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், அவைத்தலைவர் ஏழுமலை, பொருளார் பெருமாள், துணை செயலாளர்கள் ராஜலிங்கம், மணிமேகலை ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் துரை திருநாவுக்கரசு, ரவிச்சந்திரன், முன்னாள் பொருளாளர் தமிழரசன், பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ஞானமூர்த்தி நன்றி கூறினார்.
கோழிப்பண்ணை செ.புதூர்
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கோழிப்பண்ணை செ.புதூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வேம்பிரவி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் பாபுஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், ஒன்றியக்குழு துணை தலைவர் ஜீவிதா ரவி, ஒன்றிய கவுன்சிலர் முகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் சீனிவாசன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர் நளினி சாரங்கம், பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினர். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் விநாயகமூர்த்தி, அருணாச்சலம், ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், வெற்றிவேல், புனிதா ராமமூர்த்தி, கண்காணிப்புக்குழு எத்திராசன், ஊராட்சிகள் சங்க தலைவர் சங்கர், செயலாளர் அரசு குமாரி ஹரிகிருஷ்ணன், பொருளாளர் கனிமொழி, துணைச் செயலாளர் வீரம்மாள் சண்முகானந்தம், சிலம்பரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நிர்மலா அந்தோணிசாமி, தனலட்சுமி ரவி, கிளை செயலாளர்கள் முருகன், வேதநாயகம், கலியபெருமாள், விஜயலட்சுமி, மன்னார்சாமி, கில்பர்ட் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கந்தாடு
மரக்காணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கந்தாடு கிராமத்தில் நடந்தது. இதற்கு மரக்காணம் ஒன்றியக்குழு தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். தலைமைக்கழக பேச்சாளர் ஆவடி கா.மு.ஜான் கலந்து கொண்டு, தி.மு.க. அரசு செய்த திட்டங்கள் குறித்தும், மரக்காணம் முதல் திண்டிவனம் வரை ரூ.261 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி, கீழ்புத்துப்பட்டில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் ஒன்றியக்குழு துணை தலைவர் பழனி, மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.