தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மானூரில் நடந்தது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

மானூரில் மேற்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் பற்றி பொதுமக்களிடம் விளக்கி கூறினார். கூட்டத்தில் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், யூனியன் துணைத்தலைவர் கலைசெல்வி, நெல்லை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் தர்மன், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story