தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தந்தை உடல் இன்று அடக்கம்


தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தந்தை உடல் இன்று அடக்கம்
x

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் தந்தை உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

இன்று உடல் அடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவர் கே.கே.அன்புச்செல்வன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற அமைப்பாளர் தொழிலதிபர் கே.கே.முருகு பாண்டியன் ஆகியோரது தந்தை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்.கண்ணன் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதி ஊர்வலமும், நல்லடக்கமும் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் அமெரிக்காவிலிருந்து முருகு பாண்டியன் வந்த பிறகு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி

மறைந்த தலைமை ஆசிரியர் கண்ணன் உடலுக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், எம்.பி.க்கள் ஆ.ராசா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் கந்தர்வகோட்டை எம். எல்.ஏ. சின்னத்துரை, புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உதயம் சண்முகம், பரணி கார்த்திகேயன், கலை ராஜா, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள், நகர் மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வியாபார பிரமுகர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story