மது விற்ற தி.மு.க. கவுன்சிலர் உள்ளிட்ட 12 பேர் கைது
மது விற்ற தி.மு.க. கவுன்சிலர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணாபுரம்
மது விற்ற தி.மு.க. கவுன்சிலர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் தலைமையிலான போலீசார் சாராய விற்பனை தடுப்பு ேசாதனை மேற்கொண்டனர்.
இதில் தச்சம்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், மோகன், சையத்முபாரக், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், போலீஸ்காரர்கள் சுரேஷ், ஐயப்பன், ரஞ்சித், அருண்குமரன் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.
அப்போது பறையம்பட்டை சேர்ந்த முனுசாமி (வயது 61), தச்சம்பட்டை சேர்ந்த ஏழுமலை (55) ,அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (48), காட்டான்பூண்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் (36), நரியாப்பட்டு முரளிதரன் (28), பழையனூர் வலசை சத்யராஜ் (30), வேலையாம்பாக்கம் முருகன் (37), கண்டியாங்குப்பம் அருணகிரி (56), வள்ளிமலையை சேர்ந்த தி.மு.க.ஒன்றிய கவுன்சிலர் காந்தி (56) உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் கைது செய்தனர். அவர்கள் விற்பனை செய்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மது விற்றபோது தி.மு.க.கவுன்சிலர் உள்பட 12 பேர் கைதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.