தி.மு.க. தெருமுனை பிரசாரம்


தி.மு.க. தெருமுனை பிரசாரம்
x

வள்ளியூரில் தி.மு.க. தெருமுனை பிரசாரம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் வடக்கன்குளம் அருகே அழகநேரியில் நடந்தது. வள்ளியூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் வேலு தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளரும், வள்ளியூர் யூனியன் சேர்மனுமான சேவியர் செல்வராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மல்லிகா அருள் வரவேற்றார். மாநில பேச்சாளர்கள் பரணி சேகர், பனிபாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், லிங்கசாந்தி, வள்ளியூர் தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் விஜயன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் எரிக் ஜூட், மாவட்ட பிரதிநிதி மணிவர்ணபெருமாள், யூனியன் கவுன்சிலர் அலெக்ஸ் பால் கேசிசின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அடங்கார்குளம் கிளை செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story