தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்


தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
x

மாப்படுகையில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

மயிலாடுதுறை


மயிலாடுதுறை அருகே மாப்படுகையில், தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம், மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் பாலு, ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் சிவக்குமார், பாரதி மதியழகன், அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தலைமை பேச்சாளர் பொன்னேரி ஜெ.சிவா, தி.மு.க. உயர்நிலை திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் கல்யாணம், தி.மு.க. மாவட்ட வக்கீல்அணி செயலாளர் ராம.சேயோன் ஆகியோர் கலந்துகொண்டு, தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன், வக்கீல் அருள்தாஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Next Story