தி.மு.க. முப்பெரும் விழா
கீழப்பாவூரில் தி.மு.க. முப்பெரும் விழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கீழப்பாவூரில் ரத்ததான முகாம் மற்றும் தி.மு.க. கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமையில் நடைபெற்ற ரத்த தான முகாமினை மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். இதில் 45 பேர் ரத்தம் தானம் செய்தனர்.
பேரூர் செயலாளர் ஜெகதீசன் ஏற்பாட்டில் மைதானம், காந்தி சிலை, வடக்கு பஸ்நிலையம், பெட்ரோல் பல்க் அருகில், சென்ட்ரல் வங்கி அருகில் ஆகிய 5 இடங்களில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன், அன்பழகன், பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், ஒன்றிய பொருளாளர் அன்பரசு, கவுன்சிலர் கிருஷ்ணராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அரவிந்த் மணிராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் விஜி, முத்துச்செல்வி, ஜாஸ்மின், இசக்கிமுத்து, ஒன்றிய மகளிரணி சமுத்திரகனி உள்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.