முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் - 29ம் தேதி சென்னையில் நடக்கிறது...!


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் - 29ம் தேதி சென்னையில் நடக்கிறது...!
x

சென்னையில் வரும் 29ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29-1-2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.

அதுபோது, தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில், மத்திய அரசின் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story