வாக்குச்சாவடி முகவர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சி; ராஜா எம்.எல்.ஏ. அறிக்கை
சங்கரன்கோவில், புளியங்குடியில் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலி காட்சி மூலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சி என நடக்கிறது என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொிவித்துள்ளார்.
சங்கரன்கோவில்:
வாக்குச்சாவடி முகவர்களுடன் தமிழக முதல்-அமைச்சரும், கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடுகிறார்.
இதுகுறித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சங்கரன்கோவில் தொகுதிக்கு ெரயில்வே பீடர் சாலையில் ஜெய் சாந்தி மகாலில் எனது தலைமையிலும், வாசுதேவநல்லூர் தொகுதிக்கு புளியங்குடி மூர்த்தி பாப்பா திருமண மகாலில் தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன் தலைமையிலும் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள், அந்தந்த தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.