தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்


தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம் கடலூரில் நாளை நடக்கிறது

கடலூர்

குறிஞ்சிப்பாடி

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் அமுதராணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மனோரஞ்சிதம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மணிப்பூரில் பா.ஜ.க. அரசு தாய்மையை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை தடுக்க தவறியதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிற மத்திய அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் நாளை(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், வார்டு, கிளை மகளிர் துணை செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், மகளிர் மாநகராட்சி மேயர், மண்டலக்குழுத்தலைவர்கள், ஒன்றியக்குழுத்தலைவர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றதலைவர்கள் மற்றும் துணைதலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிரணியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story