தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

இட்டமொழி:

ராதாபுரம், அம்பை சட்டமன்ற தொகுதி இளைஞரணி பாசறை கூட்டம் நடத்துவது ெதாடர்பாக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மகராஜாநகரில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன், நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜே.ஜாண்ரபீந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எல்.வேல்முருகன், எச்.எம்.ஜின்னா, என்.முருகன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவரும், நகர இளைஞரணி அமைப்பாளருமான எஸ்.பி.எம்.செல்வசுரேஷ் உள்பட ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story