தி.மு.க. இளைஞரணி கூட்டம்
ரிஷிவந்தியம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடந்தது. பகண்டை கூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் ஹரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாரதிதாசன், வடக்கு ஒன்றிய செயலாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில், கள்ளக்குறிச்சிக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) வருகை தரும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க அனைவரும் வெள்ளை நிற சீருடை அணிந்து வருவது என முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ராஜீவ்காந்தி, பத்மநாபன், மணி மாதவ், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story