தி.மு.க. இளைஞர் அணி பாசறை கூட்டம்


தி.மு.க. இளைஞர் அணி பாசறை கூட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2022 1:00 AM IST (Updated: 22 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலத்தில் தி.மு.க. இளைஞர் அணி பாசறை கூட்டம் நடந்தது. இதில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, ராஜேஸ்குமார் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

சேந்தமங்கலம்:-

நாமக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் கான்ஸ்டன்ட் ரவீந்திரன், பொன்னுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பி.ஆர். சுந்தரம், நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் திராவிட மாடலுக்கு உதாரணமாக இருந்து விட்டு சென்றுள்ளனர். அதன்பிறகு என்னைப் போன்ற சிலர் தி.மு.க.வுக்கு வலு சேர்த்துக் கொண்டுள்ளனர். அதேபோல தி.மு.க.வின் போர் வீரர்களாக காட்சியளிக்கும் நீங்களும் திராவிட மாடலை தொடர வேண்டும் என்றார்.

முன்னதாக மாநில சுயாட்சி என்ற தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் விரிவாக பேசினார். ஒன்றிய செயலாளர்கள் கே.பி.ராமசாமி (நாமகிரிப்பேட்டை), அசோக்குமார் (சேந்தமங்கலம்), பாலசுப்ரமணியம் (எருமப்பட்டி), பேரூர் செயலாளர் தனபாலன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபாகரன், விஜய் பிரகாஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், சேந்தமங்கலம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனா்.


Next Story