தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம்
பணகுடியில் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
பணகுடி:
பணகுடியில் ராதாபுரம் தொகுதி தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன், வள்ளியூர் ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜா, கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட மாடல் பற்றி ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன், மாநில சுயாட்சி பற்றி சூரியா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினார்கள். பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், பணகுடி பேரூராட்சி துணை தலைவர் சகாய புஷ்பராஜ், நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுடலைகண்ணு, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், பணகுடி பேரூர் தி.மு.க. இளைஞர்அணி அமைப்பாளர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story