அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் கூறவில்லை - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு சாதாரணமானது தான் அரசியல் குறித்து பேசவில்லை. பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என நான் கூறியதில்லை. அதிமுக பாஜக கூட்டணி இறுதி, உறுதி என இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்கள் அல்ல. கூட்டணி குறித்து தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது. தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே தொகுதிகள் குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது.
2024,2026 ஆண்டு தேர்தல் குறித்து 2 மணி நேரம் அமித்ஷாவிடம் பேசினேன். 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக வேண்டும். இப்போதைய நிலையில் போட்டியிடும் தொகுதியின் எண்ணிக்கை குறித்து பேசுவது சரியல்ல.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் நான் பேசி வருகிறேன்.தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் பின்னடைவு இருந்தாலும் எனக்கு கவலையில்லை. இப்போது செல்லும் பாதை 20 ஆண்டுகளுக்கு பிறகு சரியாக இருக்காது. நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் தூய்மையான அரசியலை பார்ப்பீர்கள். வானதி சீனிவாசனும் கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். ஏப்ரல் 14-ம் தேதி திமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றாலும் எந்த பய்னும் இல்லை என நான் நினைக்கிறேன். தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றாலும் அதில் எந்த பயனும் இல்லை என நினைக்கிறேன் என்றார்.