திமுகவின் புதிய இளைஞர் அணி நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்


திமுகவின் புதிய இளைஞர் அணி நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
x

அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை,

தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டு உள்ளார். துணை செயலாளர்களாக எஸ்.ஜோயல், ரகுபதி, இளையராஜா, அப்துல்மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

மாநில மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி மாநில செயலாளராக ஹெலன் டேவிட்சன், இணை செயலாளர் குமரி விஜயகுமார், துணை செயலாளர்கள் பவானி ராஜேந்திரன், தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப.ராணி.

தொண்டர் அணி இணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார், துணை செயலாளர்கள் சத்யா பழனிகுமார், ரேகா பிரியதர்ஷினி, விஜிலா சத்யானந்த், மாலதி நாகராஜ், பிரசார குழு செயலாளர்கள் சேலம் சுஜாதா, கே.ராணி ரவிச்சந்திரன், அமலு, மாலதி நாராயணசாமி, தேன்மொழி, உமா மகேஷ்வரி, ஜெசி பொன்ராணி.

சமூக வலைதள பொறுப்பாளர்கள் டாக்டர் யாழினி, ரத்னா லோகேஸ்வரன், அ.ரியா, ஆலோசனைக்குழு பொறுப்பாளர்கள் காஞ்சனா கமலநாதன், சங்கரி நாராயணன், காரல் மார்க்ஸ், சிம்லா முத்துசோழன், சித்ரமுகிரி சத்தியவாணி முத்து, வாசுகி ரமணன், காயத்ரி சீனிவாசன், மலர் மரகதம் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துணை செயலாளர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் எஸ்.ஜோயல், ரகுபதி, இளையராஜா, அப்துல்மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Next Story