கோவையில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் போஸ்டர்களை அகற்ற வேண்டும் - பாஜகவினர் போராட்டம்...!


கோவையில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் போஸ்டர்களை அகற்ற வேண்டும் - பாஜகவினர் போராட்டம்...!
x

கோவையில் விதிகளை மீறி மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் போஸ்டர்களை அகற்ற வேண்டும் என பாஜகவினர் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கோவையில் விதிகளை மீறி மேம்பாலத்தூணில் ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் போஸ்டர்கள் அகற்றப்படும் வரை களைய மாட்டோம் என்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோவை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விதிகளை மீறி மேம்பாலத்திக் ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் போஸ்டர்கள் 3 நாட்களில் அகற்றப்படும். மேலும், கைது செய்யப்பட்ட பாஜகவினர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று வருவாய் கோட்டாட்சியரும், போலீசாரும் உறுதி அளித்தனர்.

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் நள்ளிரவு 2 மணி அளவில் கலைந்து சென்றனர். எனினும் 3 நாட்களில் திமுகவினரின் போஸ்டர்கள் அகற்றப்படாவிட்டால் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் 16-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் பாஜகவினர் தெரிவித்தனர.




Next Story