த.மு.மு.க.-ம.ம.க. சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
மண்டபத்தில் த.மு.மு.க.-ம.ம.க. சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அறிவுரையின்படி, மாவட்டத்தில் அனைத்து சமுதாய மக்களுக்கான சமுதாயப் பணிகளை அக்கட்சியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் மாநில செயலாளர் சலீமுல்லாஹ்கான் ஏற்பாட்டில் மதுரை ஹர்ஷிதா மருத்துவமனை, த.மு.மு.க. இணைந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் நடத்தப்படுகிறது.
மண்டபம் பேரூராட்சி பகுதியில் கடந்த 15, 16-ந் தேதிகளில் தப்லீக் இஸ்திமா மாநாடு நடைபெற்றன. இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு, த.மு.மு.க. மருத்துவ சேவை சார்பில் ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த முகாமை த.மு.மு.க. மாநிலச் செயலாளர் எஸ்.சலீமுல்லாஹ்கான் தொடங்கி வைத்து பேசும் போது,
த.மு.மு.க. மற்றும் ம.ம.க. சார்பில் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். குறிப்பாக மீனவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறோம். மண்டபத்தில் நடந்த இஸ்திமா மாநாட்டில் பங்கேற்றவர்களுக்காக 2 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தினோம். ஏராளமானோர் பயன் பெற்று உள்ளனர் என்றார்.
முகாமில் மருத்துவர் ஆஷிக் அமின், மருத்துவர்கள் 6 பேர் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் 120 பேர் பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மண்டபம் பேரூர் த.மு.மு.க., மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.