த.மு.மு.க. தெருமுனை கூட்டம்
கடையம் அருகே பொட்டல்புதூரில் த.மு.மு.க. தெருமுனை கூட்டம் நடந்தது.
தென்காசி
கடையம்:
பொட்டல்புதூர் மற்றும் முதலியார்பட்டியில் த.மு.மு.க. சார்பில் டிசம்பர் 6 ஏன் எதற்கு? என்ற விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் கோதர் மைதீன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சித்திக் வரவேற்றார். துணை பொதுச்செயலாளர் மைதீன்சேட்கான் கழக கொடியேற்றி பேசினார். மாவட்ட தலைவர் முகம்மது யாகூப், தலைமை கழக பேச்சாளர் நயினார் முகம்மது, மாவட்ட துணைத்தலைவர் முகம்மது பிலால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய தலைவர் மீரான் முகைதீன் நன்றி கூறினார். ஒன்றிய செயலாளர் அசார், ஒன்றிய பொருளாளர் ராஜாஜி, முதலியார்பட்டி கிளை தலைவர் ஹாலித், இளைஞரணி செயலாளர் ஜெய்லானி, மஜித் மற்றும் பொட்டல்புதூர் நிர்வாகிகள் மதார், முகம்மது அலி, சாகுல், நூர், ஒன்றிய துணைத்தலைவர் நாகூர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story