சொந்த கிராமத்தில் ஓட்டுக்கள் வாங்க தகுதி இல்லாதவர்கள் நிர்வாகிகளாக வர ஆசைப்படக் கூடாது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு


சொந்த கிராமத்தில்  ஓட்டுக்கள் வாங்க தகுதி இல்லாதவர்கள் நிர்வாகிகளாக வர ஆசைப்படக் கூடாது  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு
x

சொந்த கிராமத்தில் ஓட்டுக்கள் வாங்க தகுதி இல்லாதவர்கள் நிர்வாகிகளாக வர ஆசைப்படக்கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

தர்மபுரி

தர்மபுரி:

சொந்த கிராமத்தில் ஓட்டுக்கள் வாங்க தகுதி இல்லாதவர்கள் நிர்வாகிகளாக வர ஆசைப்படக்கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

செயற்குழு கூட்டம்

தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க‌. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நாட்டான் மாது வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில்குமார் எம்.பி., மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன், மாநில தீர்மான குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, வக்கீல் மணி, தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு தரப்பு மக்கள் அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ளனர். தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கட்சி தொண்டர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். உங்கள் உழைப்பின் மூலம் தர்மபுரி மாவட்டம் மீண்டும் தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். எதிர் கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்.

ஆசைப்படக்கூடாது

கட்சி பொறுப்பில் யார் வரவேண்டும். யார் வரக்கூடாது என்பதை தலைமை முடிவு செய்யும். இளைஞர் அணி, மாணவர் அணி பொறுப்புகளுக் கூடாது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், செல்வராஜ், டாக்டர் பிரபு ராஜசேகர், கோபால், அன்பழகன், குட்டி, குமரவேல், ஆறுமுகம், சந்திரமோகன், செங்கண்ணன், சித்தார்த்தன், தனபால் மற்றும் கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர், சார்பு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.


Next Story