Normal
'ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள்' டி.ஜி.பி. சைலேந்திர பாபு வேண்டுகோள்
மோசடி விளையாட்டு: ‘ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள்’ டி.ஜி.பி. சைலேந்திர பாபு வேண்டுகோள்.
சென்னை,
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆன்லைன் ரம்மி விளையாட்டு வேண்டாம். அது ஒரு மோசடி விளையாட்டு.நடிகர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள் என்பதற்காக அந்த விளையாட்டில் யாரும்ஈடுபட வேண்டாம். பெரிய அளவில் பணத்தை இழப்பீர்கள். லட்சக்கணக்கான பணம் போய்விடும்.
நீங்கள் கடன் வாங்கி விளை யாடுவீர்கள். மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டும்.
அது அவமானத்தை தேடித்தரும். குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த வீடியோவை பார்த்தபிறகும், யாரும் அந்த தவறை செய்யாதீர்கள். இது தமிழக காவல்துறையின் அன்பான வேண்டுகோள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story