சீமான் தனியாக நிற்பதற்கு காரணம் என்ன தெரியுமா? பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு


சீமான் தனியாக நிற்பதற்கு காரணம் என்ன தெரியுமா? பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு
x
தினத்தந்தி 2 Sept 2023 7:18 PM IST (Updated: 3 Sept 2023 1:03 PM IST)
t-max-icont-min-icon

சீமானின் சவாலுக்கு பா.ஜக தயார். ஒரு சதவீதம் என்ன? 30 சதவீதம் வாக்குகளை கூடுதலாக வாங்கி காட்டுகிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை,

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்குபேட்டி அளித்தார். அப்போது அவர், கூறியதாவது:-

" ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பா.ஜ.க முழுமையாக வரவேற்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. இதனால் கொள்கை ரீதியாக முடிவுகள் எடுக்க முடியவில்லை. இந்த திட்டத்தை அ.தி.முக, த.மா.கா போன்ற கட்சிகள் வரவேற்றுள்ளன. உன்னதமான இந்த திட்டத்தை தமிழக மக்கள் வரவேற்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் பல நாடுகளில் உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியை இது அதிகப்படுத்தும். இதனை எதிர்ப்பவர்கள் சுயநலவாதிகள்.குடும்ப அரசியலை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள்.சீமானின் சவாலுக்கு பா.ஜக தயார். ஒரு சதவீதம் என்ன? 30 சதவீதம் வாக்குகளை கூடுதலாக வாங்கி காட்டுகிறோம். சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. யாரும் அவரை சேர்க்கவில்லை என்பது தான் காரணம்.

சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும் என்ற தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. விஷ்வ கர்மா யோஜனா திட்டத்தை கி.வீரமணியை தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் 39 -க்கு 39 தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். 25 தொகுதிகளில் ஜெயிக்கும் அளவிற்கு கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும் என்பது எனது ஆசை இவ்வாறு அவர் கூறினார்.


Next Story