சொந்த கிளினிக்கில் கவனம் செலுத்தும் அரசு மருத்துவர்கள் மீது விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றச்சாட்டு

சொந்த கிளினிக்கில் கவனம் செலுத்தும் அரசு மருத்துவர்கள் மீது விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றச்சாட்டு
x

சொந்த கிளினிக்கில் கவனம் செலுத்தும் அரசு மருத்துவர்கள் மீது விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்

திருப்பூர்

மடத்துக்குளம்

சொந்த கிளினிக்கில் கவனம் செலுத்தும் அரசு மருத்துவர்கள் மீது விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்

சொந்த கிளினிக்

மடத்துக்குளம் பகுதியில் சமூக வலைத்தளம் மற்றும் வாட்ஸ்-அப் குரூப் மூலம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:- அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் சிலர் தனியாக கிளினிக் வைத்து உள்ளனர். இவர்கள் உரிய நேரத்திற்கு அரசு மருத்துவமனைக்கு வருவது இல்லை. முழு கவனம் எடுத்து தங்கள் பணியில் ஈடுபடுவது இல்லை. சில அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் கதவுகள் மூடப்பட்டுள்ளன. சிகிச்சைக்கு அழைத்தால் யாரும் வருவதில்லை. நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பதும் இல்லை. இதனால் சிகிச்சை பெற நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை நோய் பாதிப்பு அதிகம் என அச்சுறுத்தி தங்கள் சொந்த கிளினிக்கிற்கு வரவழைக்கின்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதோடு, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story