டாக்டர்கள் தின விழா


டாக்டர்கள் தின விழா
x

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி கிளப், இந்திய மருத்துவ சங்கம், அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் இஸ்லாமியா கல்லூரி ரோட்ராக்ட் ஆகியவை இணைந்து தேசிய டாக்டர்கள் தினம் மற்றும் ரத்ததானம் முகாமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.

விழாவுக்கு மிட்டவுன் ரோட்டரி கிளப் தலைவர் ஆர்.வி.குமார் தலைமை தாங்கினார். டாக்டர் தினத்தையொட்டி 'கேக்' வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து டாக்டர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. கல்லூரி ரோட்ராக்ட் மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.

இதில் அரசு மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள், கிளப் நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல ஆலங்காயம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த டாக்டர் தின விழாவுக்கு தனியார் வங்கி கிளை மேலாளர் விஜய் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கலந்துகொண்டார். இதில் சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கலந்துகொண்டனர்.


Next Story