டாக்டர்கள் ரத்ததானம்
கோவில்பட்டியில் டாக்டர்கள் ரத்ததானம் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு டாக்டர்கள் ரத்ததானம் வழங்கி டாக்டர் பிதான்சந்தரராய் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மனிதகுல சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவர் சுதா, ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வன் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார். டாக்டர் சின்னதுரை அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் அகத்தியன், ரோட்டரி சங்க நிர்வாகி சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். டாக்டர் துரை பத்மநாபன் நன்றி கூறினார்.