மாத ஊதியம் வழங்கக்கோரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஊர்வலம்


மாத ஊதியம் வழங்கக்கோரி    அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாத ஊதியம் வழங்கக்கோரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.

கடலூர்


அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வந்தது. இக்கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று, கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றம் செய்தது. அதன்அடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்தநிலையில் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், டாக்டர்களுக்கு கடந்த அக்டோபர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், ஊதியம் வழங்கக்கோரியும் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள், முட நீக்கியல் வல்லுனர்கள் நேற்று காலை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியபடி பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள், துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசனை சந்தித்து தங்களுக்கு மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர், இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இன்னும் ஒரிரு நாட்களில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து டாக்டர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story