விருத்தாசலத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

விருத்தாசலத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முத்தமிழ் என்பவர் விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது அங்கிருந்த டாக்டர், செவிலியர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அவருடைய உறவினர்கள் டாக்டர், செவிலியர்கள் மற்றும் பணியில் இருந்த காவலர் ஆகியோரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைகண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டா்கள் செய்யும் பணியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் டாக்டர் சாமிநாதன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட தலைவர் டாக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார். இதில் டாக்டா்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து டாக்டர்கள் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புகாராக கொடுத்தனர்.


Next Story